பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு திட்டங்களை அமலுக்கு கொண்டு வந்தார். இதில், ஆதார் கார்டு அறிமுகமும் ஒன்று. ஆதார் கார்டு என்பது 12 இலக்கு எண் கொண்டு சுய அடையாள அட்டை ஆகும். இந்த ஆதார் எண்ணை அரசின் திட்டங்களுடன் இணைக்க வேண்டும். இதனை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது. இதற்காக அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை காலக்கெடு நீடித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
சரி, அரசின் சலுகைகள், திட்டங்கள், சேவைகள் நாடு முழுவதும் கொண்டு செல்ல மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. பொதுத்துறை மற்றும் தனியார் துறை சார்ந்த சேவைகளுக்கும் இந்த ஆதார் எண் இணைக்க கட்டாய முறை செயல்படுத்தி வருகிறது.
அதன்படி எந்தெந்த சேவைகளுக்கு ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் என்ற சில தகவல்களை கீழே தெரிந்துக் கொள்வோம்.
பான்கார்டு, மொலைப் எண், வங்கிக்கணக்கு, பரஸ்பர நிதி முதலீடு, இன்சூரன்ஸ் பாலிசிகள், கிரெடிட் கார்டு, அஞ்சலக சேமிப்பு கணக்கு, புதிய மற்றும் பழைய தேசிய சேமிப்பு பத்திரம், புதிய மற்றும் பழைய கிசான் விகாஸ் பத்திர கணக்கு, கல்லூரி பல்கலைக்கழக மாணவர்களுக்கான மத்திய அரசின் கல்வித் தொகை, காஸ் சிலிண்டர் மானியம், தொழிலாளர் ஓய்வூதிய திட்டம், பயிர்காப்பீடு திட்டம்.
மேற்கண்டவற்றிற்கு கட்டாயம் ஆதார் எண் இணைப்பு வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.