செங்கல்பட்டு - தாம்பரம் இடையே ரயில் சேவை ரத்து

by Isaivaani, Jun 24, 2018, 10:48 AM IST

செங்கல்பட்டு - தாம்பரம் இடையேயான மின்சார ரயில்களின் சேவை இன்று இயங்காது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

செங்கல்பட்டு - தாம்பரம் இடையே உள்ள வண்டலூர் மற்றும் கூடுவாஞ்சேரி வழித்தடத்தில் பாலம் கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. இதனால், இன்று காலை 8.25 மணி முதல் மாலை 6.40 மணி வரை என 10 மணி நேரம் மின்சார ரயில்கள் இயங்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இன்று விடுமுறை நாள் என்பதால், பாலம் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனால், இன்று ஒரு நாளுக்கு மட்டும் செங்கல்பட்டு - தாம்பரம் இடையோன ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதைதொடர்ந்து, மாலை 6.40 மணிக்கு பிறகு இந்த வழித்தடத்தில் ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get your business listed on our directory >>More Tamilnadu News