தூத்துக்குடி போராட்டம்!- அரசின் மேல்முறையீடு தள்ளுபடி

by Rahini A, Jun 27, 2018, 14:33 PM IST

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டவர்களின் ஜாமின் மனுவை எதிர்த்த தமிழக அரசின் மேல்முறையீடு வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 22ம் தேதி நடத்திய மாபெரும் போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடியில் எந்தவொரு முன் அறிவிப்பும் இன்றி போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர் என மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற நாளிலிருந்து இதுநாள் வரையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவித்ததாகப் பல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தொடர்ப்பட்டுள்ளன. 

மேலும் தமிழக அரசு சார்பில் போராட்டத்தில் ஈடுபட்ட கலவரக்காரர்கள் என்ற முத்திரையுடன் 65 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களின் ஜாமின் மனுவை ஒப்புதல் அளித்தது தூத்துக்குடி நீதிமன்றம்.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் நடைபெற்ற மேல்முறையீடு வழக்கில், 65 பேர் மீதான குற்றச்சாட்டு தொடர்பான ஆதாரத்தை காவல்துறை சமர்பிக்க தவறியதால் தூத்துக்குடி நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை எதிர்த்த அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

You'r reading தூத்துக்குடி போராட்டம்!- அரசின் மேல்முறையீடு தள்ளுபடி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை