யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் சத்குரு ஜக்கி வாசுதேவ் ஆகியோர் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு எதிராக ட்வீட் செய்துள்ளனர்.
ராம்தேவ், ‘தென்னிந்தியாவில் வேதாந்தாவுக்கு சொந்தமாக இருக்கும் ஒரு ஆலையில் சர்வதேச கிளர்ச்சியாளர்கள், அப்பாவி உள்ளூர் மக்களை வைத்து பிரச்னையை ஏற்படுத்தியுள்ளனர்.
தொழிற்சாலைகள் தான் நாட்டின் வளர்ச்சிக்கா இருக்கும் கோயில் போன்றவை. அவை மூடப்படக் கூடாது’ என்று ட்வீட் செய்துள்ளார்.
இதே போல், ஜக்கி வாசுதேவ், ‘காப்பர் உற்பத்தி குறித்து கருத்து சொல்ல நான் வல்லுநர் கிடையாது. ஆனால், இந்தியாவுக்கு அதிக அளவிலான காப்பர் தேவை இருக்கிறது. நாம் இந்தியாவில் காப்பரைத் தயாரிக்கவில்லை என்றால், கண்டிப்பாக சீனாவிலிருந்து தான் அதை வாங்கப் போகிறோம்.
சுற்றுச்சூழலுக்கு எதிரான வரம்பு மீறல்களை சட்டபூர்வமாக எதிர்கொண்டு விடலாம். மிகப் பெரும் நிறுவனங்களை மூடுவது என்பது பொருளாதார தற்கொலை’ என்று குறிப்பிட்டு உள்ளார்.