ஆன்லைனில் மின்சாரக் கட்டணம் கட்டினால் அதிலிருந்து 1 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
வீடு, அலுவலகத்தின் மின் கட்டணம் பொதுவாக மின்வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்று செலுத்துவது வழக்கம். இதற்காக, அவர்கள் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருக்க வேண்டிய நிலைய ஏற்பட்டது.
இதன் பிறகு, டிஜிட்டல் முறை நடைமுறைக்கு வந்தது. அதாவது, பொது மக்கள் தங்களின் வீட்டு மின் கட்டணத்தை ஆன்லைனிலேயே செலுத்தும் முறை நடைமுறைக்கு வந்தது. இதனால், 20% மக்கள் தங்களது மின்சாரக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ஆன்லைன் நடைமுறையை ஊக்குவிக்கும் வகையில் மின்கட்டணம் செலுத்துவோருக்கு மின்கட்டணத்தில் இருந்து 1 % தள்ளுபடி செய்யப்படும் எனவும், இத்திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.