அத்துமீறியதாக தமிழக மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை!

Jul 5, 2018, 14:13 PM IST

இலங்கை கடல் எல்லையில் அத்துமீறி மீன் பிடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு தமிழகத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

இது குறித்து மீன்வளத் துறையின் துணை இயக்குநர் மணிகண்டன், ‘ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 3,000 மீனவர்கள் நேற்று பல படகுகள் மூலம் காரைநகர் பகுதிக்கு அருகில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இன்று காலை அவர்கள் அங்கு மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது, இலங்கை கடற்படையினர் இரண்டு படகுகளை சுற்றி வளைத்தனர்.

மற்றவர்கள் தப்பித்துவிட்ட போதும், 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் அவர்கள் படகுடன் காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இலங்கை கடல் எல்லையில் தடை செய்யப்பட்ட வலைகளை வைத்து மீன் பிடித்ததால், மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 14 ஆம் தேதி மீன் பிடி தடைக் காலம் முடிவடைந்த பின்னர் இலங்கை கடற்படையால், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை’ என்று கூறியுள்ளது. ஜூன் 28 ஆம் தேதி, கச்சத்தீவு அருகில் தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது, இலங்கை கடற்படையால் அவர்கள் விரட்டியடிக்கப் பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அப்போது மீனவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.

You'r reading அத்துமீறியதாக தமிழக மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை