இளம்பெண் குளிப்பதை எட்டிப் பார்த்த ஆளுநர் - ஊர்மக்கள் முற்றுகை

அரசுப் பணிகளை ஆய்வு செய்கிறேன் என சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் இளம்பெண் குளிப்பதை எட்டிப் பார்த்ததால் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்.

Banwarilal Purohit

கடலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமையன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். அப்போது, வண்டிப்பாளையம் என்ற ஊரில் அவர் ஆய்வு மேற்கொண்டபோது ஆளுநர் திடீரென கீற்று மறைப்பை விலக்கி உள்ளே பார்த்தார்.

அதிர்ச்சியடைந்த இளம்பெண் பெரும்சத்தத்துடன் அலறியதுடன், அங்கிருந்து ஓடினார். இதனையடுத்து கீற்று மறைப்பில் இளம்பெண்குளித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து விட்டதாக புகார் எழுந்துள்ளது.

தகவலறிந்த அந்த பகுதி பொதுமக்கள், ஆளுநர் புரோஹித்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆளுநர் புரோஹித், ஆய்வை அவசர அவசரமாகமுடித்துக் கொண்டு சென்னைக்கு கிளம்பினார்.

இந்நிலையில் இந்த தகவலுக்கு ஆளுநர் மாளிகை தற்போது மறுப்புத் தெரிவித்துள்ளது.