கடலில் புயல்காற்று வீசக்கூடும்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Jul 13, 2018, 12:21 PM IST

கடலில் இன்று பயங்கரமாகக் காற்று வீசக்கூடும் என்பதால் கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகம் 60 கிமீ வரையில் இருக்கும் என்று இதனால் மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

கடந்த ஒரு வார காலமாகவே வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து ஆங்காங்கே இடியுடன் கூடிய மழையும் அல்லது மிதமான மழையும் பெய்து வருகிறது. இன்றைய வானிலை செய்தி அறிக்கையை வெளியிட்ட சென்னை வானிலை ஆய்வு மையம், "தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யலாம். 

தென்மேற்கு திசையில் இருந்து வட கடலோர பகுதிகளில் மணிக்கு 35- 50கி.மீ வேகத்தில் காற்று வீசக் கூடும். தென் கடலோர மாவட்டங்களில் 35- 60கி.மீ வேகத்தில் கடலில் காற்று வீசுக்கூடும். இதனால் வங்கக் கடலில் மீனவர்கள் யாரும் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் செல்ல வேண்டாம்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You'r reading கடலில் புயல்காற்று வீசக்கூடும்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை