நியூட்ரினோ ஆய்வால் கதிர்வீச்சு பாதிப்பே இருக்காது- விவேக் தத்தார்

Jul 14, 2018, 11:55 AM IST

'நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித கேடும் ஏற்படாது' என நியூட்ரினோ ஆய்வு மைய திட்ட இயக்குநர் விவேக் தத்தார் தெரிவித்துள்ளார்.

நியூட்ரினோ ஆய்வு திட்டம் குறித்து அத்திட்டத்தின் இயக்குநர் விவேக் தத்தார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். அப்போது அவர் பேசுகையில், "நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது. வளிமண்டலத்தில் உள்ள நியூட்ரினோ துகள்களை கணக்கிடுவதுதான் இந்த ஆய்வின் நோக்கம்.

பூமிக்கு அடியில் திட்டம் கொண்டு வரப்படவில்லை. மலைக்கு கீழேதான் மையம் அமைக்கப்பட உள்ளது. 1.3 டெஸ்லா ஆற்றல் கொண்ட மிகப்பெரிய மின்காந்தம் அமைக்கப்படுகிறது. நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தால் எந்தவித கதிர்வீச்சும் இருக்காது. பூமியை துளைத்து நியூட்ரினோ ஆய்வு நடத்தப்படாது.

நியூட்ரினோ ஆய்வுக்கூடத்திற்கு கருவி எதுவும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படவில்லை. வளிமண்டலத்தில் காஸ்மிக் துகளுடன் கலந்துவரும் நியூட்ரினோ துகளை கண்டறிய தான் சுரங்கத்தில் ஆய்வு செய்யப்படுகிறது" என விளக்கம் அளித்தார்.

 

You'r reading நியூட்ரினோ ஆய்வால் கதிர்வீச்சு பாதிப்பே இருக்காது- விவேக் தத்தார் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை