லோக் அதாலத்... 77,785 வழக்குகளுக்குத் தீர்வு

லோக் அதாலத்தில் 77,785 வழக்குகளுக்குத் தீர்வு

Jul 14, 2018, 20:56 PM IST

தமிழகம் முழுவதும் இன்று நடந்த லோக் அதாலத்தில், 262 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பிலான 77 ஆயிரத்து 785 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளன.

Lok Adalat

உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதியும், தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவருமான நீதிபதி ரஞ்சன் கோகாய், இரு மாதங்களுக்கு ஒரு முறை மக்கள் நீதிமன்றம் எனும் தேசிய லோக் அதாலத்தை நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தமிழகத்தில் இன்று லோக் அதாலத் நடந்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் 10 அமர்வுகளும், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆறு அமர்வுகளும், மாவட்ட மற்றும் தாலுகா அளவுகளில் 435 அமர்வுகளும், வங்கிகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க 23 அமர்வுகளும் என மொத்தம், 483 அமர்வுகளில், செக் மோசடி, வாகன விபத்து இழப்பீடு கோரிய வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் தீர்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

மொத்தம், 2 லட்சத்துக்கும் அதிகமாக வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில், 262.66 கோடி ரூபாய் மதிப்பிலான 77,785 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு உறுப்பினர் செயலர் நசீர் அகமது தெரிவித்துள்ளார்.

You'r reading லோக் அதாலத்... 77,785 வழக்குகளுக்குத் தீர்வு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை