நாட்டின் வளர்ச்சிக்கு 8 வழிச்சாலை போன்ற திட்டங்கள் வரவேண்டும் என்று தனது ஆதரவை ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முகமது யாசின் என்ற 8 வயது சிறுவன் சாலையில் கிடந்த 500 ரூபாய் கட்டு பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்தார். இதனால், யாசினுக்கு பாராட்டுகள் குவிந்து வருறது. மேலும், யாசினுக்கு பரிசுகள் அளித்த போலீஸ் தரப்பு முன்வந்தபோது, தனது அதெல்லாம் வேண்டும் ரஜினிகாந்தை சந்திக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்தார்.
இதையடுத்து, ரசிகர் மன்ற நிர்வாகிகள் யாசின் ரஜினியை சந்திக்க ஏற்பாடு செய்தனர். அதன்படி, யாசின் தனது குடும்பத்தினருடன் சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் ரஜினியை சந்தித்தனர். யாசினை பாராட்டிய ரஜினி தங்க சங்கிலி அணிவித்தார்.
இதன் பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினிகாந்த் கூறியதாவது: யாசினின் செயல் பாராட்டுக்குரியது. எதிர்காலத்தில் யாசின் படிப்புக்கு தேவையாக செலவுகளுக்கு நான் உதவுவேன்.
மேலும், நாட்டின் வளர்ச்சிக்கு 8 வழி சாலைகள் அவசியம். விவசாயிகளுக்கு பாதிப்புகள் இல்லாமல் அதனை நிறைவேற்றினால் நல்லது. இதேபோல், ஒரு நாடு ஒரு தேர்தல் திட்டம் நேரத்தையும், செலவையும் மிச்சப்படுத்துகிறது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.