அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு வருகிற ஜூலை 25-ம் தேதி முதல் தொடங்கும் என அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகம் (மற்றும் கீழ் இயங்கும் கல்லூரிகள்), அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், சுய நிதியில் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் சமர்பிக்கப்படும் சீட்கள் ஆகியவற்றுக்கு டி.என்.இ.ஏ அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
+2-வில் மாணவர்கள் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியல் படிப்புகளில் எடுக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இந்தப் பட்டியலின் அடிப்படையில் ஆன்லைன் கலந்தாய்வுக்கு மாணவர்கள் அழைக்கப்படுவார்கள்.
தமிழகத்தில் இந்த ஆண்டு, 91.1 சதவிகிதத்தினர் +2-வில் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தோருக்கான கலந்தாய்வு வருகிற ஜூலை மாதம் 25-ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.