அரசு ஆசிரியர் பணி வேண்டுவோருக்கு இனி வரும் காலங்களில் இரண்டு வெவ்வேறான தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வை தனியாகவும், நியமனத்துக்கான போட்டித்தேர்வை தனியாகவும் இனி வரும் காலங்களில் தமிழக தேர்வு ஆணையம் நடத்தலாம் என தமிழக அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஆசிரியப் பணிக்கான போட்டித்தேர்வு எழுதுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
கூடுதலாக, அரசுப்பள்ளியில் ஆசிரியர்கள் நியமனத்துக்கு புதிய நடைமுறையை அரசாணையாக வெளியிட்டுள்ளது தமிழக அரசு. இது முழுவதும் தமிழ்நாடு பொதுகல்வி வாரியக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகள் ஆகும். இதையே தமிழக அரசு ஏற்று தற்போது தேர்வு ஆணையத்துக்கு ஆணையாக வழங்கியுள்ளது.