சென்னை பரங்கிமலை அருகே மின்சார ரயிலின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தபோது தடுப்பு சுவர் இடித்து உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மின்சார ரயிலின் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த 4 பேர் தடுப்பு சுவர் இடித்து இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் ரயில் பயணிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவியும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவியும் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.