உடல்நிலை குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை சந்திக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரை, பல்வேறு அரசியல் பிரமுகர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து செல்கின்றனர்.
நேற்று இரவு, கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவை ஏற்படுத்தியது. இதன் பிறகு, அவரது உடல்நிலை சீரானதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கருணாநிதியை சந்திக்க மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார்.
தமிழக முதல்வருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், சி.வி.சண்முகம், காமராஜ் உள்ளிட்டோர் சென்றுள்ளனர். இவர்கள், ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தனர்.
முதல்வரின் வருகையொட்டி அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.