தி.மு.க தலைவர் கருணாநிதி நலமுடன் இருக்கிறார் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு வயது முதிர்வு மற்றும் சிறுநீரக தொற்று காரணமாக கடந்த மாதம் 27ம் தேதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், அவரது உடலில் கடந்த 2 நாட்களாக தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் இதைதொடர்ந்து, உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த தகவல் வெளியில் பரவியதை அடுத்து, திமுக தொண்டர்கள், கழக நிர்வாகிகள் என அனைவரும் மருத்துவமனையை சூழ்ந்தனர். மேலும், கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மற்றும் குடும்பத்தினரும் காவிரி மருத்துவமனைக்கு விரைந்தனர். இதனால், மீண்டும் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், காவிரி மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்த மு.க.அழகிரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் நலத்துடன் இருக்கிறார் என்று அவர் தெரிவித்தார்.