கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய இலங்கை அமைச்சர் வேண்டுகோள்

மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Veluchamy Radhakrishnan

இலங்கை நாட்டின் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

"இன்று கருணாநிதி அவரின் இறப்பு என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமன்றி ஏனைய நாடுகளில் வாழும் தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும்.

கலைஞர் என்ற அடிப்படையில் ஒரு கலைஞனை இலக்கும் போது அந்த நாட்டினுடைய, கலைதுறைகள் மற்றும் ஏனைய துறைகளை பற்றி சிந்திக்க வேண்டிய தருணமாககருணாநிதியின் இறப்பு உள்ளது" என தெரிவித்தார்.

திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி சடங்கில், பங்கேற்பதற்காக, இலங்கை அமைச்சர் மனோகணேசன், இலங்கை எம்.பிகளான எம்.திலகராஜ் மற்றும் வடிவேல் சுரோஷ் ஆகியோர் தமிழகத்திற்கு வருகை தருகின்றனர்.