கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை முழுக்கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து, 15 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுவதால், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காவிரி நீர்பிடிப்பு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதுள்ள- இதன் காரணமாக , கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை முழுக்கொள்ளளவை எட்டியது.
தற்போது அணையின் நீர்மட்டம் 107 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக உள்ளது. எனவே அணையின் பாதுகாப்பு கருதி, அப்படியே 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து, கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்குச் சென்று தங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், கனமழை தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் கூடுதலாக தண்ணீர் திறந்துவிடப்பட வாய்ப்பு உள்ளது என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.