தஹில் ரமானி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்பு

சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று நடந்த விழாவில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக விஜய கம்லேஷ் தஹில் ரமானி பொறுப்பேற்றுக்கொண்டார்.

Dahil Ramani

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த விஜய கம்லேஷ் தஹில் ரமானி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

அதன்படி, சென்னை ஆளுநர் மாளிகையில் தஹில் ரமானியின் பதவியேற்பு விழா இன்று நடந்தது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தஹில் ரமானிக்கு பதவிப்பிரமானம் செய்து வைத்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாக அவர் பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.