ஸ்டெர்லைட் வழக்கு...நீதிபதி வசம் ஒப்படைப்பா...?

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் வசம் ஒப்படைக்க, தேசிய பசுமை தீர்ப்பாயம் முடிவு செய்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில்  வேதாந்தா குழுமம் வழக்கு தொடர்ந்தது
இந்த வழக்கை, பசுமை தீர்ப்பாய நீதிபதி ஏ.கே. கோயல்  விசாரித்து வருகிறார். இன்றைய விசாரணையின் போது, வழக்கை, ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரிடம் ஒப்படைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
 
இதையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதிகள் சிவசுப்ரமணியன், மற்றும் சந்துரு ஆகியோரது பெயரையும் நீதிபதி முன்மொழிந்தார். 
தமிழக அரசு தரப்பில், ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவை விசாரணை அதிகாரியாக ஏற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.
 
இதனிடையே, வேதாந்தா குழுமத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அரிமா சுந்தரம், வேறொரு வழக்கில் ஆஜராவதற்காக உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளதால், விசாரணை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 
 
வழக்கு விசாரணையின் போது, ஸ்டெர்லைட்டில் இருந்து காப்பர் கழிவுகள் கொட்டப்படுவதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையை கவனத்தில் கொண்ட நீதிபதி, ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி தடுப்புச் சுவர் எழுப்ப வேண்டும் என உத்தரவிட்டார்.
Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!