ஹெல்மெட் கட்டாயம்... தமிழக அரசை கண்டித்த உயர் நீதிமன்றம்

தமிழக அரசை கண்டித்த உயர் நீதிமன்றம்

Aug 21, 2018, 13:49 PM IST

ஹெல்மெட்டை கட்டாயமாக்கி அரசாணை வெளிட்டால் மட்டும் போதாது அதை நடைமுறைபடுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

The High Court

மோட்டார் சட்ட விதிகளின் படி நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும்.

இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டுமென விதிகள் இருந்தும் அதை அரசு அமல்படுத்தவில்லை என்றும் அதை அமல்படுத்தக் கோரி சென்னை கொரட்டூரை சேர்ந்த கே கே ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் விசாரனைக்கு வந்தது.இந்த வழக்கு தொடர்பாக 2007ல் அரசு அரசாணை வெளியிட்டதாகக் கூறி, அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையையும் அரசு தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அரசாணை வெளியிட்டால் மட்டும் போதாது... அதை நடைமுறைபடுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

மேலும், மோட்டார் வாகன சட்டத்தின்படி இருசக்கர வாகனங்களில் பின் இருக்கையில் பயணிப்பவர்களும் ஹெல்மெட் அணியவேண்டும் எனத் தெரிவித்துள்ளதாகவும், இது தொடர்பாக அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்று தமிழக அரசு வரும் 23ம் தேதி பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

You'r reading ஹெல்மெட் கட்டாயம்... தமிழக அரசை கண்டித்த உயர் நீதிமன்றம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை