தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக, அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:
வங்கக்கடலில் நிலவிய மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மேலடுக்கு சுழற்சி இன்று அதிக வலுவுடன் உள்ளதால் தமிழ்நாடு, புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்யும், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்தது.
இந்த மேலடுக்கு சுழற்சி இன்று அதிக வலுவடைந்ததால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மற்ற இடங்களில் பரவலாக மழை பெய்யும். சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சென்னை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு கூறப்பட்டது.