கடலூர் வெள்ளம் பாதித்த மக்களுக்கு நிவாரண பொருட்கள்: மக்கள் நீதி மய்யம்

Aug 27, 2018, 17:24 PM IST

கடலூர் மாவட்டத்தில் கெள்ளிடம் ஆறு கரையோர பகுதிகளில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு தூத்துக்குடி மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்படுகிறது.

கர்நாடகா, கேரளா மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக அணைகள் நிரம்பியது. அணைகள் கொள்ளவை எட்டியதை அடுத்து, பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால், கடலூர் மாவட்டம் சிதம்பரம் தொகுதி கொள்ளிடம் ஆறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், கரையோரம் வசித்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், கடலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிப்படைந்த மக்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

நிவாரண பொருட்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் சேகர் தலைமையில் அரிசி, பிஸ்கெட், உடைகள், போர்வை, காய்கறிகள் என ரூ.3 லட்சம் மதிப்புள்ள நிவாரண உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிவாரணப் பொருட்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மூலம் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

You'r reading கடலூர் வெள்ளம் பாதித்த மக்களுக்கு நிவாரண பொருட்கள்: மக்கள் நீதி மய்யம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை