ஜெயலலிதாவை உரிமை கோரும் அம்ருதா, ஷோபன் பாபுவை ஏன் உரிமை கோரவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பெங்களூருவை சேர்ந்த மஞ்சுளா என்ற அம்ருதா, தன்னை ஜெயலலிதாவின் மகள் என அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தான் ஜெயலலிதாவின் மகள்தான் என நிரூபிக்க ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து டி.என்.ஏ சோதனை செய்ய வேண்டும் எனவும் அந்த மனுவில் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
அம்ருதாவின் இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுருத்தி இருந்தது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் அம்ருதா வழக்கு தொடர்ந்தார்.
மேலும், அதே பெங்களூரில் வசிக்கும் ஜெ.வின் அத்தை மகளான லலிதா என்பவரும் ”ஜெயலலிதாவிற்கும், நடிகர் சோபன்பாபுவிற்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது உண்மைதான். என்னுடைய உறவினர்தான் ஜெ.விற்கு பிரசவம் பார்த்தார். இதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என ஜெயலலிதா சத்தியம் வாங்கிக்கொண்டார்” என கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது ஜெ.வின் உடலிலில் இருந்து டி.என்.ஏ சோதனை ஏன் செய்யக்கூடாது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
ஆனால், இவ்வாறு செய்தால் நாளை ஆயிரம் பேர் இப்படி வருவார்கள் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் மறுப்புத் தெரிவித்துள்ளார். அரசு தரப்பு வழக்கறிஞரின் பதிலுக்கு அம்ருதா தரப்பு ’இதில் எந்த விளம்பரமும் இல்லை. இது எங்கள் குடும்ப விவகாரம்’ என்று அவர் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஜெ. உயிரோடு இருக்கும் போது உரிமை கோராமல் இப்போது ஏன் வழக்கு தொடர்ந்தீர்கள் என நீதிபதி கேள்வி எழுப்பிய நீதிபதி, டி.என்.ஏ சோதனை தொடர்பான மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் படி அறிவுறுத்தினார்.
இதன்படி அம்ருதா டி.என்.ஏ சோதனை நடத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜெயலலிதாவை தாய் என் உரிமை கோரும் அம்ருதா, ஷோபன் பாவுவை தந்தை என உரிமை கோராதது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.