ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு புதிய கட்டுப்பாடு

Sep 5, 2018, 23:07 PM IST
ரஜினி மக்கள் மன்ற மாவட்ட இளைஞரணி மகளிரணி அமைப்புகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 
சமீபத்தில், ரஜினி மக்கள் மன்றத்திற்கான விதிமுறை புத்தகத்தை ரஜினி வெளியிட்டிருந்தார். அதில் ரஜினி மக்கள் மன்ற கொடியை உறுப்பினர்கள் நிரந்தரமாக பயன்படுத்தக் கூடாது கூட்டங்கள், மாநாடுகள் முடிந்த பிறகு கட்சி கொடி வாகனங்களில் இருந்து அகற்றப்பட வேண்டும். 
 
மன்றக் கொடி நிச்சயமாக துணியால் மட்டுமே தயாரிக்க வேண்டும்-பிளாஸ்டிக், பாலிதீன் ஆகிய பொருட்களை தவிர்க்க வேண்டும்.மன்றப் பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்வு, நியமனம், நீக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலைமையின் முடிவே இறுதியானது. 
 
சாதி, மதம் சம்பந்தப்பட்ட சங்கங்களிலோ அமைப்புகளிலோ உறுப்பினராக உள்ளவர்கள் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினராகச் சேர அனுமதியில்லை என்பன போன்ற பல விதிமுறைகள் அந்த புத்தக்கத்தில் இடம்பெற்றிருந்தன.
 
இந்நிலையில்,ரஜினி மக்கள் மன்ற மாவட்ட இளைஞரணி மகளிரணி அமைப்புகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 
 
மாவட்ட செயலாளர்கள், பொருளாளர்கள் கண்காணிப்பின் கீழ் இளைஞரணி ,மகளிரணி செயல்பட வேண்டும். மாவட்ட மகளிர் அணி, இளைஞர் அணி செயலாளர்கள் அமைப்புகளின் தினசரி பணிகளை அறிக்கையாக அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு புதிய கட்டுப்பாடு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை