துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம்

Application for Supplementary Medical Studies

Sep 7, 2018, 13:35 PM IST

துணை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், வரும், 10ஆம் தேதி தொடங்க உள்ளது.

Supplementary Medical Studies

22 அரசு மற்றும் 17 தனியார் மருத்துவ கல்லூரிகளில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., பி.பி.டி., - பி.ஓ.டி., உள்ளிட்ட, 17 துணை மருத்துவ படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு, அரசு ஒதுக்கீட்டில், 1882 நிர்வாக ஒதுக்கீட்டில், 4,000 த்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.

இதற்கான மாணவர் சேர்க்கை, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெற உள்ளது. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், அரசு மருத்துவ கல்லூரிகளில், வரும், 10ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த தகவலை மருத்துவ கல்வி சேர்க்கை செயலாளர் செல்வராஜன் உறுதி செய்துள்ளார்.

எஸ்.சி., எஸ்.டி பிரிவு மாணவர்களுக்கு விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படும். இதர பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு 400 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற இணையதளங்களிலும், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, செப்., 20க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மருத்துவ கல்வி சேர்க்கை நிர்வாகம் அறிவித்துள்ளது.

You'r reading துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை