சென்னை: அதிமுக மற்றும் தினகரன் ஆதரவாளர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதால், வாக்கு எண்ணும் மையத்தில் கூச்சம் குழப்பம் ஏற்பட்டது. இதனால், வாக்கு எண்ணும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடந்து வந்தது. அதமுக வேட்பாளர் மதுசூதனை பின்னுக்கு தள்ளி சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 10 ஆயிரம் வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.
இந்நிலையில், அதிமுக ஆதரவாளர் ஒருவர் டிடிவி தினகரன் ஆதரவாளர் ஒருவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், வாக்கு எண்ணும் மையத்தில் இரு அணி ஆதரவாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து, டிடிவி ஆதரவாளரைத் தாக்கிய அதிமுக தொண்டரை போலீசார் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியே அனுப்பினர்.
இந்த கூச்சல் குழப்பத்தால் வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.