சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில்,3வது சுற்றிலும் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 10,421 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இதனால், டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
இதனால், சென்னை பெசன்ட் நகரில் உள்ள டிடிவி தினகரனின் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர். மேலும், பட்டாசு வெடித்து உற்சாகமாக கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் டிடிவி தினகரம் முன்னிலையில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.