ஆர்கே நகர் தொகுதி மக்கள் ஜெயலலிதா இடத்தில் என்னை அமர்த்தி இருக்கிறார்கள் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்றது. மூன்றாம் சுற்றுகள் முடிவிலும் டிடிவி தினகரன் முன்னிலை வகித்து வருகிறார்.
இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “துரோக ஆட்சியை மக்கள் விரும்பவில்லை. ஆர்கே நகர் தொகுதி மக்கள் ஜெயலலிதா இடத்தில் என்னை அமர்த்தி இருக்கிறார்கள்.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் மதுசூதனனின் ரவுடிகள் பிரச்சினை செய்கின்றனர். இன்னும் மூன்று மாதத்தில் ஆட்சி முடிந்துவிடும். அப்போது, அவர்கள் கடலில் போய் தான் ஒளிய வேண்டும்.
எம்.ஜி.ஆர். தனது நினைவு நாளில், ஆர்கே நகர் வெற்றியை கொடுத்து ஆசிர்வதித்துள்ளார்” என்று கூறியுள்ளார்.
பேட்டியின்போது டிடிவி ஆதரவாளர்கள், "வாழும் எம்ஜிஆர் தினகரன்" என்று கோஷம் எழுப்பினர்.