கௌரவ விரிவுரையாளர்களுக்கு தனித்தேர்வு - கல்வித்துறை அமைச்சர்

கௌரவ விரிவுரையாளர்களுக்கு தனித்தேர்வு - கல்வித்துறை அமைச்சர்

by Rajkumar, Sep 18, 2018, 15:22 PM IST
கௌரவ விரிவுரையாளர்கள் பணி நியமனம் தொடர்பாக அவர்களுக்கு தனியாக போட்டித் தேர்வு நடத்த பரிசீலிக்கப்படுவதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் வங்கி மேலாண்மை துறையில் 25ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டடார் அமைச்சர் கே.பி.அன்பழகன்.
 
அதன், பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, "509 பொறியியல் கல்லூரிகளில் 94 ஆயிரத்து 867 இடங்கள் காலியாக இருப்பதாக” தெரிவித்தார்.
 
கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுவதாகவும், இதனால் அதிகப்படியான அரசு கலைக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டதாகவும், அவர் தெரிவித்தார். 
 
மேலும், 1585 புதிய பாடப்பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளதால் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

You'r reading கௌரவ விரிவுரையாளர்களுக்கு தனித்தேர்வு - கல்வித்துறை அமைச்சர் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை