உலகின் மிகப்பெரிய மிஸ்டு கால் கட்சி நோட்டாவிடம் தோற்றது - தலித் போராளி கிண்டல்

உலகின் மிகப்பெரிய ‘மிஸ்டு கால்’ கட்சி நோட்டாவிடம் தோற்றது என்று குஜராத் மாநிலத்தை சேர்ந்த தலித் போராளி ஜிக்னேஷ் மேவானி கிண்டல் செய்துள்ளார்.

Jignesh Mevani BJP

முன்னதாக கடந்த ஏப்ரல் 12-ஆம் நாள் இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்னர், தேர்தல் விதி மீறு வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவடா செய்ததால் இந்த தேர்தல் நிறுத்தப்பட்டது.

அதன் பின்னர் வரும் டிசம்பர் 21-ஆம் நாள் மீண்டும் இடைத்தேர்தல் நடைப்பெற்றது. இந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக மதுசூதனனும், திமுக சார்பில் மருதுகணேஷும், சுயேட்சை வேட்பாளராக டிடிவி தினகரனும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. முடிவில், டிடிவி தினகரன் 81,317 வாக்குகள் பெற்று முதல் இடத்தையும், அதிமுக மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தையும், திமுக மருதுகணேஷ் 24,651 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தையும், நாம் தமிழர் கட்சி கலைக்கோட்டுதயம் 3,860 வாக்குகள் பெற்று நான்காம் இடத்தையும் பெற்றன.

பாஜக கரு.நாகராஜன் 1,417 வாக்குகள் பெற்றார். ஆனால், அவரை விட அதிகமாக நோட்டாவுக்கு விழுந்தது குறிப்பிடத்தக்கது. நோட்டாவிற்கு 2373 வாக்குகள் விழுந்தன. இது சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கும், கேலிக்கும் உள்ளாகியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஜிக்னேஷ் மேவானி, “தமிழகத்தில் மிஸ்டு கால் மூலம் 50 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்த, உலகின் மிகப்பெரிய மிஸ்டு கால் கட்சி, தமிழகத்தில் நடந்த தேர்தலில் 1,417 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. இந்த ஓட்டுகள் 2,373 வாக்குகளைப் பெற்ற நோட்டாவை விடவும் குறைவானது.

ஊத்தாப்பத்தின் மேல் சேர்க்கப்படும் சுவை கூட்டும் பொருளை பாஜகவினர் ஜீரணித்துக் கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!