சென்னையில் 5 நாட்களுக்கு பிறகு, பெட்ரோல் மற்றம் டீசலின் விலை மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது.
நாட்டில் பல்வேறு காரணங்களால், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தினமும் உயர்ந்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் இந்திய ரூபாய் மதிப்பின் ஏற்ற இறக்கத்தால் கடந்த ஒரு மாதமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் நேற்று பெட்ரோல் விலை 18 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.85.87க்கு விற்பனையானது. இதேபோல், 5 நாட்களாக குறைந்து வந்த டீசல் விலையில் 10 காசு உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.78.20 காசுக்கு விற்பனையானது.
படிப்படியாக உயர்ந்து வரும் பெட்ரோலின் விலை, ரூ.86ஐ நெருங்கி வருவதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல் செலவிற்கு அஞ்சி, பலர் பேருந்துகளிலும், ரயில்களிலும் பயணித்து வருகின்றனர்.