ஜெயலலிதாவுக்கு அடுத்து தினகரன் அதிமுகவில் மிஞ்சி நிற்கிறார் என்பதை காட்டுக்கிறது தினகரன் வெற்றி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
இது குறித்து புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், ”ஆர்.கே.நகரில் மதவாத சக்திகளுக்கு சவுக்கடி கொடுக்கும் விதமாக நோட்டாவுக்கு குறைவான வாக்குகளை பாஜகவுக்கு வாக்காளர்கள் கொடுத்திருக்கிறார்கள். அதே போல பாஜக வின் பினாமி அரசாக செயல்படும் ஆளும் அதிமுகவுக்கும் தோல்வியை கொடுத்திருக்கிறார்கள்.
இன்றைக்கு அதிமுகவின் பிரபலம் யார் என்பதை காட்டும் விதமாகத் தான் ஆர்.கே.நகர் மக்கள் தினகரனுக்கு வாக்களித்து இருக்கிறார்கள். ஜெயலலிதாவுக்கு அடுத்து தினகரன் அதிமுகவில் மிஞ்சி நிற்கிறார் என்பதை காட்டுக்கிறது.
தினகரன் வெற்றி. முதலமைச்சர் எடப்பாடி, துணை முதலமைச்சர் ஒ.பி.எஸ். எல்லாரையும் விட தொண்டர்கள் மத்தியில் தினகரன் மிஞ்சி நிற்கிறார். அடிக்க அடிக்க எழுவார்கள் என்பது போல தினகரனை மட்டும் குறிவைத்து அதிமுகவும் மத்தியில் ஆளும் பா.ஜ.கவும் நசுக்க நினைத்தது. அதனால் தான் அவரால் எழ முடிந்தது.
இன்று தொண்டர்கள் ஆதரவு தினகரனிடம் உள்ளதை காட்டுகிறது. அரசியலில் எந்த கட்சிக்கும் வாரிசு என்பது இல்லை. இரட்டை இலை இருந்தும் அதிமுகவின் தோல்விக்கு காரணம் பாஜகவுடன் ஏற்பட்டுள்ள நெருக்கம் தான் காரணம்” என்று தெரிவித்துள்ளார்.