அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1474 முதுகலை ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்து கொள்ள அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் விபரம் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மொத்தம் 1474 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்தப் பணியிடங்களை மாதம் 7,500 ரூபாய் சம்பளத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்து கொள்ள தமிழக அரசு அனுமதித்துள்ளது. இதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ளார்.
அனைத்து வகை ஆசிரியர்களையும் தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யும் போக்கை கைவிட்டு, முழு நேர அடிப்படையில் முறையான வகையில் பணி நியமனம் செய்ய அரசு முன்வரவேண்டும் என ஆசிரியர் பணிக்காக காத்திருப்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.