வெள்ளியன்று கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவையில் தாமதம் ஏற்பட்டது.
கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவையில் தாமதம் வெள்ளியன்று அதிகாலை 5:30 மணிக்கு அந்தமானுக்கு விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் மோசமான வானிலை காரணமாக விமானம் போர்ட் பிளேரில் தரையிறங்க இயலாத நிலை இருப்பதாக சென்னை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அந்தமானுக்கு சென்று கொண்டிருந்த விமானத்தை சென்னைக்கு திருப்புமாறு விமானிக்கு உத்தரவிடப்பட்டது. சென்னை திரும்பிய அந்த விமானம் வானிலை சரியானதும் மீண்டும் காலை 11:50 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது.
தூத்துக்குடி மற்றும் கொழும்பு நகரங்களுக்குச் செல்ல வேண்டிய இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் புறப்படுவதில் ஏறக்குறைய இரண்டு மணி நேர தாமதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து டெல்லி, மும்பை, கொச்சி, கோழிக்கோடு, ஹைதராபாத், கொல்கத்தா, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்குச் செல்ல வேண்டிய விமானங்களும் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.