சென்னையில் இன்றும் பெட்ரோலின் விலை உயர்ந்துள்ளதால் சென்னை மக்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, கச்சா எண்ணெய் உற்படத்தி சரிவு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த இரண்ட மாதங்களாக தொடர்ந்து உச்சத்தை அடைந்து வருகிறது. வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலையை மக்கள் சந்தித்து வருகின்றனர்.
இதையடுத்து, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.2.50 குறைத்து மத்திய அரசு அறிவித்தது. இதன் பிறகாவது, பெட்ரோல் விலை குறையும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் மறுநாளில் இருந்தே பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது.
சென்னை பொருத்தவரையில், இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் உயர்ந்து, ரூ.85.26க்கும், டீசல் விலை 31 காசுகள் உயர்ந்து ரூ.78.04க்கும் விற்பனையானது.
பெட்ரோல், டீசல் விலையின் தொடர் உயர்வால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.