சென்னை: ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்ஏவாக டிடிவி தினகரன் இன்று பதவி ஏற்றார். இவருக்கு சபாநாயகர் தனபால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தனிகரன் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். இதனால், டிடிவி தினகரன் 29ம் தேதி (இன்று) பதவியேற்பார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தினகரன் இன்று எம்.எல்.ஏவாக பதவி ஏற்றார். இதற்கான நிகழ்ச்சி தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகர் அலுவலக அறையில் நடந்தது. டிடிவி தினகரனுக்கு சபாநாயகர் தனபால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழக சட்டமன்ற கூட்டம் வருகிற 8ம் தேதி கூடுகிறது. இந்த கூட்டத் தொடரில் எம்.எல்.ஏவாக பதவி ஏற்றுள்ள தினகரன் முதன்முறையாக செல்ல இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.