சிலை கடத்தல் விவகாரத்தில் தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் தோழி கிரண்ராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டை தொடர்ந்து, போயஸ் கார்டனில் உள்ள அவரது பெண் தோழி கிரண் ராவ் இல்லத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சமீபத்தில் சோதனை நடத்தியது. வீட்டை சுற்றி பூமிக்கடியில் புதைக்கப்பட்டிருந்த 23 சிலைகள் தோண்டி எடுக்கப்பட்டன.
இதையடுத்து, ரன்வீர் ஷா, கிரண் ராவ் மற்றும்அவர்களது ஊழியர்கள் என, மொத்தம், 14 பேருக்கு, கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல்தடுப்பு பிரிவு அலுவலகத்தில், நேரில் ஆஜராக, சம்மன் அனுப்பப்பட்டது.
மிகவும் தொலைவாக இருப்பதால் சென்னை விசாரிக்க அனுமதி அளிக்குமாறு கிரண் ராவ் மற்றும் அவரது பணியாளர்கள் 11 பேர் சார்பில் வழக்கறிஞர்கள் கும்பகோணம் சிலை தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி மனுதாக்கல் செய்தனர்.
இதனை ஏற்க மறுத்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, சம்மன் அனுப்பப்பட்டவர்கள் கும்பகோணத்தில் உள்ள அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும்' என் கட்டாயமாக தெரிவித்துள்ளது.