திமுகவின் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு: அன்பழகன் அதிரடி

திமுக மாநிலங்களவை உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன் அக்கட்சியின் செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிப்பதாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

திமுகவின் மாநிலங்களவை எம்பியாக உள்ள டிகேஎஸ் இளங்கோவன், அக்கட்சியின் செய்தித் தொடர்பு செயலாளர் பதவியில் இருந்து நேற்று இரவு முதல் பதவியிலிருந்து விடுவிக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார்.

திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கட்சியில் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது. கட்சியின் முக்கிய தலைவராக இருந்து வந்த டிகேஎஸ் இளங்கோவம் திடீரென விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால், திமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். டிகேஎஸ் இளங்கோவன் விடுவிக்கப்பட்டதற்கான காரணம் குறித்தும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

இதேபோல், ஊடகங்களில் விவாதங்களை தவிர திமுக சார்பில் சிறப்பு நேர்காணலில் பங்கேற்போரின் பட்டியலை நேற்று வெளியிடப்பட்டது.
இதில், க.பொன்முடி, ஆர்.எஸ்.பாரதி, செல்வகணபதி, ஆ.ராசா, ஜெ.அன்பழகன், பழ.கருப்பையா மற்றும் டி.கே.எஸ் இளங்கோவன் உள்பட 7 பேர் அடங்கிய பட்டியலை அக்கட்சியின் தலைமை கழகம் வெளியிட்டது.

திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளர் பொறுப்பிற்கு உடனடியாக வேறு ஒருவரை நியமிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!