ரஜினியின் அரசியல் அறிவிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் மட்டும்தான் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று சொல்கிறார்கள்.
தமிழர்கள்தான் உலகத்துக்கே, ஆளும் முறையைக் கற்று கொடுத்த பெருமை வாய்ந்த பாரம்பர்யம் உடையவர்கள். அத்தகைய மாநிலத்தை ஆள இங்கு நம் தமிழர்கள் யாருமே இல்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “முல்லை பெரியாறு பிரச்னையின் போதும், காவிரிப் பிரச்னையின்போதும் இவர்கள் எல்லாம் எங்கு போனார்கள்?
ரஜினி அரசியலுக்கு வந்தால் கடுமையாக எதிர்ப்போம். சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி சொல்கிறாரே, சிஸ்டன் என்றால் என்ன? சிஸ்டம் என்றால் அமைப்பு என்று பொருள். எந்த சிஸ்டம் சரியில்லை என்று ரஜினிகாந்த் தெளிவாக கூற வேண்டும்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.