நடுரோட்டில் வழிப்பறி சிசிடிவியால் மாட்டிய கும்பல்-புதுச்சேரியில்

Robbery in pondicherry road side thief got in CCTV

Oct 16, 2018, 12:06 PM IST

புதுச்சேரியில் கத்தியால் தாக்கி 7 லட்சம் ரூபாயை பறித்த முகமூடி கும்பலை சிசிடிவி காட்சி அடிப்படையில் வலைவீசி தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள வெங்கடேஸ்வரா பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் பாலசுப்பிரமணியம் என்பவர் பண வசூலிப்பாளராக வேலை செய்து வருகிறார். இவர், நேற்று புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் வசூலித்த 7 லட்சம் ரூபாய் பணத்துடன் பெரியார் நகர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது  அவரை பின் தொடர்ந்து வந்த முகமூடி அணிந்த மூன்று நபர்களில் ஒருவன் பாலசுப்பிரமணியத்தை வழிமறித்து கத்தியால் தாக்கி 7 லட்சம் ரூபாயை பறித்தான். இது குறித்த சிசிடிவி காட்சியை கைப்பற்றியுள்ள ரெட்டியார்பாளையம் போலீசார் வழிப்பறி கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

You'r reading நடுரோட்டில் வழிப்பறி சிசிடிவியால் மாட்டிய கும்பல்-புதுச்சேரியில் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை