ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். எல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை - தினகரன் அதிரடி

Advertisement

ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ் `ஹீரோவாக தெரிகிறார்கள். உண்மையிலே ஜீரோக்கள். இவர்களை எதிர்கொள்வது பெரிய விஷயமே இல்லை என்று டிடிவி தினகரன் கூறினார்.

நடந்து முடிந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன் அமோக வெற்றி பெற்றார். பின்னர் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். பிறகு, சட்டசபை வளாகத்திற்கு வெளியில் செய்தியாளர்களை சந்திக்கையில், “சிலர் மீது நடவடிக்கை எடுத்தால் ஆட்சியை தக்க வைக்கலாம்” என்றார்.

இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “ஆட்சி மீது பழியை சுமத்தி அரசியல் ஆதாயம் தேட சிலர் முயற்சி செய்கின்றனர். ஆயிரம் தினகரன்கள் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது” என்றார்.

இவர்களுக்கு பதிலடி கொடுத்து சென்னையில் பேட்டி அளித்த டிடிவி தினகரன், “2017-ல் நாங்கள் பல சோதனைகளை சந்தித்தோம். எங்களுடன் இருந்தவர்களே துரோகிகளாக மாறுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி நினைப்பது எதுவும் நடக்காது. பகல் கனவு காண்பது எடப்பாடி அணியினர்தான். இவர்கள் பெயரளவுக்கு தான் ஆளும் கட்சி. இவர்கள் எல்லோரும் அட்டைக் கத்தி வீரர்கள்” என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், “ஆடிட்டர் குருமூர்த்திக்கே பயந்து சாகிறார்கள். காக்கிச் சட்டையை பார்த்தாலே பயப்படுகிறவர்கள். வழக்கு என்றாலே பயப்படுபவர்கள். இன்று ஹீரோவாக தெரிகிறார்கள். உண்மையிலே ஜீரோக்கள். இவர்களை எதிர்கொள்வது பெரிய விஷயமே இல்லை” என்றும் தினகரன் கூறினார்.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
/body>