பராமரிப்பு பணியால் இன்று, நாளை மின்சார ரயில் சேவையில் மாற்றம்: முழு விவரம்

சென்னை: பட்டாபிராம்-திருநின்றவூர் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்றும், நாளையும் மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மூர்மார்க்கெட்-திருவள்ளூர் காலை 9.15, 9.30, 11.30 மணி, திருவள்ளூர்-மூர்மார்க்கெட் காலை 10.50, 11.25, 1.05 மணி ரயில்கள் இன்றும், நாளையும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
வேளச்சேரி-திருவள்ளூர் காலை 9.05 மணி, திருவள்ளூர் -வேளச்சேரி காலை 11.05 மணி ரயில்கள் இன்றும், கடற்கரை- திருவள்ளூர் காலை 9.50 மணி, திருவள்ளூர் -கடற்கரை காலை 11.05 மணி ரயில்கள் நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மூர்மார்க்கெட் -அரக்கோணம் காலை 9.10, 11.05, 12.50 மணி, மூர்மார்க்கெட் -திருவள்ளூர் காலை 9.45 மணி, மூர்மார்க்கெட் -திருத்தணி காலை 10, 11.45 மணி, மூர்மார்க்கெட் -கடம்பத்தூர் காலை 10.30, மதியம் 12 மணி மின்சார ரயில்கள் இன்றும், நாளையும் பட்டாபிராம், திருநின்றவூர், வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை, நெமிலிச்சேரி ஆகிய நிறுத்தங்களில் நிற்காது.
திருவள்ளூர் -மூர்மார்க்கெட் காலை 10.05, 12 மணி, திருத்தணி -மூர்மார்க்கெட் காலை 9.40 மணி, அரக்கோணம் -மூர்மார்க்கெட் காலை 10.50, 12 மணி, கடம்பத்தூர் -மூர்மார்க்கெட் மதியம் 1.40 மணி ரயில்கள் 2 நாட்களும் புட்லூர், திருநின்றவூர், நெமிலிச்சேரி, பட்டாபிராம் ஆகிய நிறுத்தங்களில் நிற்காது.
ஆவடி-வேளச்சேரி காலை 8.45, 12.10, 2.40 மணி, சூலூர்பேட்டை -வேளச்சேரி  காலை 7.25 மணி, பட்டாபிராம் -வேளச்சேரி காலை 8.45 மணி, கும்மிடிப்பூண்டி -வேளச்சேரி காலை 8.50 மணி, திருத்தணி -வேளச்சேரி காலை 8.50 மணி, திருவள்ளூர் -வேளச்சேரி காலை 11.05, 1.40 மணி, கடம்பத்தூர் -வேளச்சேரி மதியம் 12.05 மணி ஆகிய மின்சார ரயில்கள் இன்று கடற்கரை -வேளச்சேரி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.
வேளச்சேரி -ஆவடி காலை 10.15 மணி, வேளச்சேரி -திருத்தணி காலை 11.20 மணி, வேளச்சேரி -திருவள்ளூர் மதியம் 12.15, 2.45 மணி, வேளச்சேரி -பட்டாபிராம் மதியம் 12.55 மணி, வேளச்சேரி -அரக்கோணம் மதியம் 1.35 மணி, வேளச்சேரி -சூலூர்பேட்டை மதியம் 1.55 மணி, வேளச்சேரி -கும்மிடிப்பூண்டி மதியம் 2.55 மணி ஆகிய மின்சார ரயில்கள் இன்று வேளச்சேரி -கடற்கரை வரை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடற்கரை -வேளச்சேரி பறக்கும் ரயில் இரு மார்க்கத்திலும் இன்று காலை 9.35 மணி முதல் மாலை 4 மணி வரை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடற்கரை -வேளச்சேரி ரயில் நாளை காலை 9.40 மணி முதல் மாலை 4 மணி வரையும், வேளச்சேரி -கடற்கரை ரயில் நாளை காலை 9.30 மணி முதல் மாலை 4.10 மணி வரையும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தத்தில் ஈடுபட்டு வருவதால், பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ரயில் சேவைகளில் பராமரிப்பு காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் என்ன செய்வதென்று தெரியாமல் மக்கள் திணறி வருகின்றனர்.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!