அழைப்பை ஏற்றார் ஸ்டாலின்: எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க முடிவு

Stalin decided to participate Opposition leaders meeting

Nov 9, 2018, 23:24 PM IST

டெல்லியில் விரைவில் நடைபெற இருக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளர்.

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் சந்திரபாடு நாயுடு ஈடுபட்டுள்ளார்.

அதன்படி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்பட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்து பேசி வருகிறார்.

இந்நிலையில், சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று மாலை சந்தித்து பேசினார். ஆலோசனைக்கு பிறகு இருவரும் சேர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

இதில், மத்தியில் உள்ள பாஜக ஆட்சியை வீழ்த்தும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு மேற்கொண்டு வரும நடவடிக்கையை வரவேற்று ஏற்கனவே அறிக்கைவிடுத்துள்ளேன்.
பிரதமர் மோடி ஆட்சியில் மாநிலங்களின் உரிமை பறிக்கப்பட்டு வருகிறது. சிபிஐ, ஆர்பிஐ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. டெல்லியில் விரைவில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். அந்த கூட்டத்தில் கலந்து கொள்வேன். தேசிய அளவிலான கூட்டணிக்கு திமுக ஆதரவு அளிக்கும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

You'r reading அழைப்பை ஏற்றார் ஸ்டாலின்: எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க முடிவு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை