ரஜினி வீட்டுக்காக தரகர் அவதாரமெடுத்த அரசியல் தலைவர்- Exclusive

Advertisement

ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா, தொழிலதிபர் வணங்காமுடியின் மகனும் வஞ்சகர் உலகம் திரைப்படத்தில் 2-வது நாயகனாக நடித்த விசாகனை திருமணம் செய்ய இருப்பதாக நமது இணையதளம் முதலில் செய்தி வெளியிட்டிருந்தது. தற்போது இந்த திருமணப் பேச்சுவார்த்தையை ‘வெற்றிகரமாக’ நடத்தி முடித்ததே ஒரு தேசியக் கட்சித் தலைவர்தான் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செளந்தர்யா ஏற்கனவே அஸ்வினை திருமணம் செய்திருந்தார். இத்திருமணம் விவாகரத்தில் முடிந்தது. விசாகனும் தினகரன் முன்னாள் அதிபர் கே.பி.கே.குமரனின் மகள் கன்னிகாவை திருமணம் செய்திருந்தார். இத்திருமணமும் விவகாரத்தில் முடிவடைந்தது.

பின்னர் கன்னிகா, திரிஷாவின் மாஜி காதலர் வருண் மணியனை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் விசாகனுக்கும் செளந்தர்யாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்த காதல் விவகாரம் ரஜினிக்கு தெரிய வருகிறது.

அவரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் சரி என ஒப்புக் கொள்கிறார். அதேநேரத்தில் விசாகன் குடும்பத்துடன் எப்படி பேச்சுவார்த்தை நடத்துவது என ரஜினிகாந்த் தயங்கி இருக்கிறார்.

அப்போது ரஜினிகாந்திடம், உங்களுக்கு மிக நெருக்கமான அந்த தேசிய கட்சித் தலைவரிடம் பேசுங்கள். ஏனெனில் விசாகனின் உறவினர் ஒருவர் அந்த தலைவருடன் மிக நெருக்கமானவர் என கூறியிருக்கின்றனர்.

இதையடுத்து தேசிய கட்சித் தலைவரை தொலைபேசியில் அழைத்து பேசியிருக்கிறார் ரஜினிகாந்த். அவரும் ரஜினிகாந்த் வீட்டுக்கு கட்சி கொடி இல்லாத காரில் சென்றிருக்கிறார். டிரைவரும் இல்லாமல் அவரே காரை ஓட்டிச் சென்றிருக்கிறார்.

இப்படி ரஜினிகாந்த் வீட்டுக்கு அந்த தலைவர் போனதால் ‘கூட்டணி’ பேச்சுவார்த்தை என அரசியல் களம் அதகளப்பட்டது. பின்னர் விசாகன் குடும்பத்தை தொடர்பு ரஜினிகாந்த் தெரிவித்த தகவலை கூறியிருக்கிறார்.

கடந்த 2 மாதங்களாக இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதனால் அந்த அரசியல் கட்சித் தலைவர் ‘அண்ணாச்சி ஹேப்பி’ என மகிழ்வோடு இருக்கிறாராம்.

-திலீபன்

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
/body>