தமிழ்நாட்டுல மொத்தம் எத்தனை பஸ் தான் ஓடுது? சும்மா தெரிஞ்சுக்குவோம்..

by Isaivaani, Jan 6, 2018, 18:59 PM IST

சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் பயணம் செய்வதற்கு முதலில் தேர்வு செய்வது பேருந்து தான். பொருளாதரத்தில் பின்தங்கிய மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரையில் பேருந்தை பயண்படுத்துவதற்கு முதல் காரணம் குறைந்த கட்டணம். மற்ற போக்குவரத்துகளை விட பேருந்து கட்டணம் குறைவு என்று சொன்னால் அது மிகையல்ல.

தமிழ்நாடு முழுவதும் பல வகையான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவைகளை தேவைக்கு ஏற்ப மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
பேருந்துகள் நஷ்டத்தில் ஓடுவதாக கூறி கடந்த சில வாரங்களில் சுமார் 5000 பேருந்து சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சரி, தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை பேருந்து ஓடுதுனு சும்மா இப்போ தெரிஞ்சுக்குவோம்..

தமிழ்நாட்டில் மொத்தம் 22 ஆயிரத்து 533 பேருந்துகள் உள்ளன. இவற்றில், சென்னை மாநகரப் பேருந்துகள் (எம்டிசி) மட்டும் 3,688, நகரப் பேருந்துகள் 6916, புறநகர் சேவை (மொப்புசில் சேவை) பேருந்துகள் 8561 என இயங்குகின்றன.

மேலும், மலைவழி பேருந்துகள் சேவை 528, மாவட்டங்களை இணைக்கும் பேருந்துகள் 648, வெளிமாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகள் 435, ஸ்பேர் பஸ் எனப்படும் மாற்றுப் பேருந்துகள் 1757 என உள்ளன.

இத்தனை பேருந்துகள் இருந்தும், போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தம் போராட்டத்தால் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading தமிழ்நாட்டுல மொத்தம் எத்தனை பஸ் தான் ஓடுது? சும்மா தெரிஞ்சுக்குவோம்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை