மோடி ஆட்டம் முடிந்தது..இனி நானே பிரதமர்... ரஜினியிடம் பேரம் பேசிய நிதின் கட்காரி EXCLUSIVE
மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை டெல்லியில் சந்தித்து பேசியிருந்தார் நடிகர் ரஜினிகாந்த். அப்போது லோக்சபா தேர்தலில் ரஜினிகாந்த் கட்சி போட்டியிட வேண்டும் என்கிற கோரிக்கையையும் கட்காரி முன்வைத்தார்.
நிதின் கட்காரியைப் பொறுத்தவரையில் வரும் லோக்சபா தேர்தலில் பாஜக 200-க்கும் குறைவான இடங்கள் பெற்றால், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தாம் பிரதமராகலாம் என கனவில் இருக்கிறார். இதனைத்தான் ரஜினிகாந்திடம் அவர் தெரிவித்திருந்தார்.
ரஜினிகாந்த் கட்சி லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு சில இடங்கள் வென்றால் தம்மை ஆதரிக்கும் என்பது நிதின் கட்காரியின் கணக்கு. இதற்காகத்தான் ரஜினிகாந்தை அவர் அழைத்து பேசினார்.
ஆனால் இந்த சந்திப்பின் போது ரஜினிகாந்த் சொன்ன ஒரு விஷயம் நிதின் கட்காரியை ஆடிப் போக வைத்தது. அதாவது, நான் தொடங்கும் கட்சி சட்டசபை தேர்தலில் மட்டும் போட்டியிடும்.. லோக்சபா தேர்தல் குறித்து யோசிக்கவே இல்லை என கூறியிருக்கிறார்.
இதை சற்றும் கட்காரி எதிர்பார்க்கவில்லையாம். கட்சியை தொடங்கிவிட்டு லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்பது புதிராக இருக்கிறதே என கேட்டிருக்கிறார். நான் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்றுதான் சொல்லி வருகிறேன்... அதைத்தான் செய்வேன்.. லோக்சபா தேர்தல் பற்றி எங்களுக்கு கவலையே இல்லை என மீண்டும் விளக்கம் அளித்திருக்கிறார் ரஜினிகாந்த்.
இதனைத் தொடர்ந்து, லோக்சபா தேர்தலில் நீங்கள் போட்டியிடுங்கள்.. அனைத்து செலவுகளையும் நான் பார்த்து கொள்கிறேன் என்றும் நிதின் கட்காரி உறுதியளித்தாராம். ஆனால் ரஜினிகாந்த், லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு நாங்கள் வெற்றி பெறுவோம் என்பது சாத்தியமில்லை..அதனால்தான் சட்டசபை தேர்தலில் மட்டும் போட்டியிட போகிறோம் என்று கூறியிருக்கிறார்.
இதற்கு பதிலளித்த கட்காரி, தமிழகத்துக்கு தற்போது சட்டசபை தேர்தல் வரப்போவது இல்லை.. 2021-ல்தான் தேர்தல் வரும் என அடித்து கூறியிருக்கிறார். ஆனாலும் ரஜினிகாந்த் தமது நிலைப்பாட்டில் உறுதியாகவே இருந்தாராம்.
-எழில் பிரதீபன்