தற்காலிக ஓட்டுநர்களின் கவனக்குறைவால், இன்று தமிழகத்தில் கடலூர் மற்றும் சென்னையில் இருவர் உயிரிழந்துள்ளார்கள்.
கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன, இருசக்கர வாகனத்தில் வந்த சீயோன் என்பவர் அந்த இரண்டு பேருந்துகளுக்கு நடுவில் சிக்கி, சம்பவ இத்திலேயே உயிரிழந்தார், இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியிலுள்ள மக்கள், தற்காலிக ஓட்டுநர்கள் அரசு பேருந்துகளை இயக்குவதை அனுமதிக்க முடியாது என்று கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை: சென்னை சாந்தோம் நகர் பகுதியில், சாலையில் சென்றுகொண்டுருந்த இருசக்கர வாகனத்தின் மீது, கட்டுப்பாட்டை இழந்து வந்த மாநகரப்பேருந்து மோதியதில், டுமீல் குப்பத்தை சேர்ந்த அஜித்குமார் (18) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், சாலையோரத்தில் நடந்து சென்றவர்கள் மீது அந்த பேருந்து மோதியதில், மேலும் இருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்இ.
துபோன்ற சம்பவங்களால், பொதுமக்களுக்கும், போராடும் அரசு ஊழியர்களுக்கும் அரசின் மீது வெறுப்பு ஏற்பட தொடங்கியுள்ளது. பணி நியமன சட்டத்துக்கு எதிராக முதல்வர் மற்றும் போக்குவரத்து அமைச்சர் செயல்படுகிறார் என்றும், அனுபவம் இல்லாத தற்காலிக ஓட்டுனர்களை வைத்து, பேருந்துகளை இயக்கி இன்று ஏற்பட்ட விபத்துகளுக்கு, முதல்வரும் போக்குவரத்து அமைச்சருமே காரணம் என்றும், தொழிற்சங்க நிர்வாகிகளின் ஒருவரான நடராஜன் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.