கஜா புயல் நிவாரண நிதிக்கு தேமுதிக சார்பில் ரூ1 கோடி நிதி வழங்கப்படும் என அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
காவிரி டெல்டா மாவட்டங்களை உருக்குலைத்து போட்டிருக்கிறது கஜா புயல். பல லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரங்களை பறிகொடுத்துள்ளனர்.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். அரசியல் கட்சிகளும் தமிழக அரசின் நிவாரணப் பணிகளுக்கு நிதி உதவி அறிவித்துள்ளன.
சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து திமுக பொருளாளர் துரைமுருகன் ரூ1 கோடி நிதி உதவியை இன்று வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், பாதிக்கப்பட்ட இடங்களில் அரசியல் செய்ய கூடாது; அரசின் நிவாரண பணிகளுக்கு ஒத்துழைப்போம் என்றார்.
இதேபோல் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அரசின் நிவாரணப் பணிகளுக்கு ரூ1 கோடி நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.