முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு வழங்கவேண்டும் சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கடந்த 8ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி சொல்லும் தீர்மானம் நடைபெற்றது.
அப்போது பேசிய துணை சபாயாகர் பொள்ளாச்சி ஜெயராமன், ‘அதிமுக ஆட்சி நிலைக்குமா என்று சிலர் சந்தேகம் எழுப்புகின்றனர். இது மார்க்கண்டேய ஆட்சி. நிரந்தரமாக நிலைத்திருக்கும். ‘எனக்குப் பிறகும் 100 ஆண்டுகள் அதிமுக ஆட்சி இருக்கும்’ என்று ஜெயலலிதா கூறினார். அது நடக்கும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு வழங்கவேண்டும். பெண் சிசுக்கொலையைத் தடுக்க அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் மிக முக்கியமானவை. 1992ஆம் ஆண்டு அவர் கொண்டு வந்த தொட்டில் குழந்தைத் திட்டத்தை நோபல் பரிசு பெற்ற அன்னை தெரேசாவே பாராட்டி இருந்தார்’ என்று தெரிவித்துள்ளார்.